சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிப்பு நிலையம் மீண்டும் இயங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கப்பல் ஒன்றிலிருந்து இன்று மசகு எண்ணெய் இறக்கும் நடவடிக்கையுடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிப்பு நிலையம் மீண்டும் இயங்கவுள்ளதாகவும்,கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் அந்நிலையம் முதல் தடவையாக இயங்கவுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

6 நாட்களில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எரிபொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 26 ஆம் திகதி வியாழக்கிழமை நிலைவரப்படி, 23,022 மெற்றிக் தொன் டீசல், 2,588 மெற்றிக் தொன் சுப்பர் டீசல், 39,968 மெற்றிக் தொன் பெற்றோல், 7,112 மெற்றிக் தொன் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 3,678 மெற்றிக் தொன் விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர்  காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.