2022 Zero Chance Stories குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பு

Published By: Digital Desk 5

27 May, 2022 | 10:06 AM
image

2022 Zero Chance Stories குறும்படப் போட்டியில் முதல் 3 வெற்றியாளர்களின் விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக படகு மூலம் பிரயாணிப்பதால் ஏற்படக்கூடிய  அபாயங்கள் இப்போட்டியில் பங்குபற்றிய திரைப்படங்கள் மூலம் சிறந்த முறையில் மக்களுக்கு எடுத்துரைத்துரைக்கப்பட்டன.

சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்தல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான ஆபத்துக்களையும் விளைவுகளையும் ஆக்கபூர்வமாக மக்களிடையே கொண்டு செல்வதற்கு குறுந்திரைப்படங்கள் மிகச் சிறந்த ஊடகம் ஆகும் என்று அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் CSC RAN கூறினார்.

2022 குறும்படப் போட்டி பெரும் வெற்றி பெற்றுள்ளது.  நாங்கள் தரமான பல படைப்புகளைப் பெற்றுள்ளோம்.

இப்போட்டியில் அடையாளம் காணப்பட்ட சிறந்த குறுந்திரைப்படங்கள் 'சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் குடியேற வாய்ப்பே இல்லை' எனும் தற்போதைய விழிப்புணர்வு செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படவுள்ளன.

அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆட்கடத்தல்  நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடவும், ஆபத்தான இந்த பயணத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதைத் தடுக்கவும் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

 'சட்டவிரோதமாக  படகு மூலம்  அவுஸ்திரேலியாவில் குடியேற முயற்சிப்பது குறித்து மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்குவது  இன்றியமையாதது.

அதன் மூலமாக அவர்கள் ஆட்கடத்தல்காரர்களின் பொய்களுக்கு பலியாக மாட்டார்கள் மற்றும்  கடற்பயணத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைக்க மாட்டார்கள். 

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட குறும்படங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பிரச்சாரம் செய்வது பலரின் வாழ்க்கையை மாற்றும்' என்று ரியர் அட்மிரல் ஜோன்ஸ் கூறினார்.

'அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக  கடல் மூலம்  குடியேறல்' என்ற கருப்பொருளில் திரைப்பட தயாரிப்பாளர்களின்  சிறந்த படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டதற்கான அறிவித்தல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் 3 வெற்றியாளர்கள்:

முதலாம்  இடம் - கிரேசன் பிரசாந்த் : 'வேண்டாம்'

இரண்டாம் இடம் - யாசிர் நிசார்தீன்:'லாஸ்ட் இன் டீப்'

மூன்றாம்  இடம் -  திசோபன்: 'நீலவேணி'

முதலாவது பரிசாக முழுமையான படப்பிடிப்பு கேமரா உபகரணங்களும், இரண்டாவது பரிசாக ட்ரோன் கேமராவும், மூன்றாவது பரிசாக Go Pro Action கேமராவும் சிறந்த 10 படைப்புகளுக்கு முறையான அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

2022  Zero Chance Stories குறும்படப் போட்டியானது, டிசம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை, வரை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் வெற்றியாளர்களுக்கு  எமது வாழ்த்துக்கள்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35