மஹிந்த கொழும்பில் தங்கியுள்ள பாதுகாப்பான இரகசிய இடத்துக்குச் சென்று சி.ஐ.டி விசாரணை

Published By: Digital Desk 4

26 May, 2022 | 09:23 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சி.ஐ.டி. இன்று ( 26) விசாரணை நடாத்தியுள்ளது.

சி.ஐ.டி.யின்  பணிப்பாளரின் கீழ் செயற்படும் உதவி பொலிஸ்  அத்தியட்சர் ஒருவர் தலைமையிலான விஷேட விசாரணைக் குழுவினர், கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள பாதுகாப்பான இரகசிய இடத்துக்கு சென்று  இந்த  விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் குறிப்பிட்டன.

 சுமார் மூன்று மணி நேரம் அந் நடவடிக்கைகள் நீடித்ததாகவும், அதன்போது  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில்  ஜூன் முதலாம் திகதி நீதிமன்றுக்கு அறிக்கையிட சி.ஐ.டி.யினர் நடவடிக்கை எடுப்பர் எனவும் குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீதான தாக்குதல்களின்  ஆரம்ப புள்ளி, அலரிமாளிகையில் நடந்த கூட்டமே  என சட்ட மா அதிபரால் கோட்டை நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 அவ்வாறான பின்னணியில், குறித்த கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடந்த நிலையில், கடந்த மே 12 ஆம் திகதி அவர வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. இந் நிலையிலேயே இன்று அது குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44