(ரொபட் அன்டனி) 

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் நவம்பர் மாதம்  5 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம்  செய்யவுள்ளார்.  

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான  மீன்பிடி   பிரச்சினை  தொடர்பாக இந்திய தரப்புடன் பேச்சு நடத்தும் பொருட்டே  அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார். 

வெளிவிவகார அமைச்சருடன்  மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீரவும்   இந்தியாவுக்கு செல்லவுள்ளதுடன் இருவரும் இந்திய  மீன்பிடி விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருடன்  பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.  

அதாவது தீர்வற்ற நிலையில் தொடர்ச்சியாக நீடிக்கும்  இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு  நிரந்தர தீர்வைக் காணும் நோக்கிலேயே   இந்த விஜயம்  அமையவுள்ளது.