தன்னிச்சையான தீர்மானத்திற்கமையவே சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published By: Vishnu

26 May, 2022 | 09:27 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சின் நிதி முகாமைத்துவ பணிப்பாளரின் தன்னிச்சையான தீர்மானத்திற்கமையவே வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

எனினும் அவ்வாறு எந்தவொரு பணிப்புரையும் தன்னால் வழங்கப்படவில்லை என்றும் , சுகாதார ஊழியர்கள் மாத்திரமின்றி எந்தவொரு அரச உத்தியோகத்தர்களின் கொடுப்பனவையும் மட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கவில்லை என்றும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

கொழும்பில் 26 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டிலுள்ள கடும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் சுகாதார ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.

எனினும் சுகாதார அமைச்சின் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் சுகாதார ஊழியர்களின் குறிப்பாக வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அனுமதியளித்துள்ளார்.

இந்த நடவடிக்கை சுகாதாரத்துறையை மேலும் வீழ்ச்சியடைச் செய்யுமே தவிர ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லாது.

இலவச சுகாதார சேவை பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக சுகாதாரத்துறையிலுள்ளவர்கள் பாதுகாப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உறுதியாகவுள்ளது.

இந்நிலையில் சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் விசேட சந்திப்பில் ஈடுபட்டது.

இதன் போது கருத்து வெளியிட்ட நிதி அமைச்சின் செயலாளர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தான் பணிப்புரை விடுக்கவில்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போதுள்ள நிலைமையை மிகவும் வினைத்திறனான முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுகாதார அமைச்சின் நிதி முகாமைத்துவ பணிப்பாளரின் தன்னிச்சையான தீர்மானத்தினால் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதனால் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். சுகாதார ஊழியர்களின் நலனை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடும் முன்னெடுக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

சுகாதாரத்துறைக்காக ஒதுக்கப்படும் நிதியில் எவ்வித மட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதியளித்துள்ளார். இம்மாதம் குறைக்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் மீள வழங்கப்படும் என்றும் அவர் எமக்கு உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஒரு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35