உலக மந்தநிலை குறித்து உலக வங்கித் தலைவர் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

27 May, 2022 | 12:05 PM
image

(என்.வீ.ஏ.)

யுக்ரெய்ன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக உணவு, எரிசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகள்; உயர்ந்துள்ளதால் உலகில் மந்தநிலை ஏற்படக்கூடும் என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார்.

'நாம் எவ்வாறு மந்நிலையை தவிர்க்கிறோம்' என்பதைப் பார்ப்பது  கடினமானது என ஐக்கிய அமெரிக்க வர்த்தக நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (25) பேசியபோது மல்பாஸ் தெரிவித்தர்ர்.

சீனாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தொடர்ச்சியான லொக்டவுன்கள்  மந்தநிலை தொடர்பான கவலைகளை மேலும் தூண்டுவதாக அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.

அதிகரித்துச் செல்லும் ஆபத்துக்களினால் உலக பொருளாதாரம் சுருங்கக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ள நிலையில் அவரது கருத்துக்கள் எச்சரிக்கையாக அமைகின்றன.

'உலகளாவிய ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நோக்கும்போது எம்மால் எவ்வாறு மந்தநிலையை தவிர்க்க முடியும் என்பதை பார்ப்பது கடினமாகும்' என எவ்வித எதிர்வுகூறலுமின்றி மல்பாஸ் தெரிவித்தார்.

'எரிபொருள் விலையை இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கும் யோசனையானது மந்தநிலையை தூண்டிவிட போதுமானது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வருடத்துக்கான தனது உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை கிட்டத்தட்ட முழு சதவீத புள்ளியான   3.2 வீதமாக உலக வங்கி கடந்த மாதம் குறைத்திருந்தது.

ஜீடிபி அல்லது மொத்த உள்ளூர் உற்பத்தி என்பது பொருளாதார வளர்ச்சியின் அளவீடு ஆகும். பொருளாதாரம் எந்த அளவு நன்றாக  அல்லது மோசமாக செயற்படுகின்றது என்பதை அளவிடும் முக்கிய வழிகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் பொருளாதார நிபுணர்கள் மற்றும் மத்திய வங்கிகளால் அது உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எப்போது விஸ்தரிப்பது மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்iகையை அதிகரிப்பது அல்லது முதலீட்டை குறைத்து தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பொன்றவற்றை தீர்மானிக்க இது வர்த்தகங்களக்கு உதவுகிறது.

எரிபொருள் மற்றும் எரிவாயுக்காக ரஷ்யாவிலேயே ஐரோப்பிய நாடுகள் பெரிதும் தங்கியிருப்பதாக மல்பாஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

ரஷ்ய எரிசத்தியில் தங்கியிருப்பதை குறைக்குமாறு மேற்குலக நாடுகள் கோரிவருகின்ற நிலையிலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவில் தங்கியிருக்கும் நிலை தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிவாயு விநியோகத்தை குறைப்பதற்கு ரஷ்யா நடவடிக்கை எடுப்பதால் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மந்தநிலை ஏற்படும் என அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்சியில் பேசுகையில் மல்பாஸ் தெரிவித்தார்.

உரவகைகள், உணவு வகைகள் மற்றும் எரிசத்தி ஆகியவற்றுக்கான தட்டுப்பாட்டினால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பாதிக்கப்படுவதாகவும் மல்பாஸ் கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08