(எஸ்.என்.நிபோஜன்)

கிளிநொச்சி, உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனித எலும்புக் கூடு ஒன்று இன்று வியாழக்கிழமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்ற பொது மக்களால் அவதானிக்கப்பட்டு அவர்களால் பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி பொலிஸார்  சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மண்டையோடு மற்றும் எலும்புக் கூடு மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் அது தற்கொலையா அல்லது  கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு இடம்பெற்ற மரணமாக அது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.