கடன் மறுசீரமைப்பின் பின் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவோம் - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா

By Vishnu

26 May, 2022 | 08:59 PM
image

(நா.தனுஜா)

தமது தொழில்நுட்பக்குழுவின் உதவியுடன் உரியவாறான கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டதன் பின்னர் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு பல்வேறு வழிமுறைகளிலும் மக்களுடன் தொடர்புபடக்கூடியவாறான கொள்கைத்தீர்மானங்களை மேற்கொள்வது அவசியம் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்த அவர், இந்திய ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மேலும் கூறியிருப்பதாவது:  

இலங்கை மக்கள் தொடர்பில் நான் மிகுந்த கரிசனை கொள்கின்றேன். அங்குள்ள நிலைவரம் தொடர்பான புகைப்படங்களைப் பார்க்கையில் எனது இதயம் கனக்கின்றது.

இது முறையற்ற நிர்வாகத்தின் விளைவு என்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழையநிலைக்குக் கொண்டுவரவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். அதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இப்போது எமது தொழில்நுட்பக்குழு இலங்கையில் இருக்கின்றது. அதனுதவியுடன் உரியவாறான கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டதன் பின்னர், அதனை அடிப்படையாகக்கொண்டு இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கத்தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34