டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜாக் டோர்சி பணிப்பாளர் சபையிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

டுவிட்டரின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக மீண்டும் இவர் தெரிவாகவுள்ளதாக  தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் இயக்குனர் குழுவில் இருந்து விலகி தலைமை நிறைவேற்று அதிகாரியாக மீண்டும் வரமாட்டேன் என்பதை டோர்சி தெளிவுபடுத்தியுள்ளார். 

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி பதவியில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாக் டோர்சி விலகினார். 

அதன் பிறகு சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி எலான் மஸ்க் முன்வந்தார். 

ஆனால் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இருந்து விலகுவதாக ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.