முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளனர்.

மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற கோட்டா கோ கம மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற மைனா கோ கம ஆகிய அமைதி ஆர்ப்பாட்டங்கள் மீது  இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (25) மாலை வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரிடம்  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், அதில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் இதனுடன் சம்பந்தப்பட்ட விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.