பெற்றோலினால் ஏற்படும் ஒரு ரூபாய் நஷ்டத்தை ஈடுசெய்ய அநுராதபுரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  இளைஞர்கள் உண்டியலை வைத்துள்ளார்கள்.

செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றில் ஒரு ரூபாய் நஷ்டத்தினையும் , ஒட்டோ டீசலொன்றில் 60 சதம் நஷ்டத்தினையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதுதாக  வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதனை அடுத்து அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், அனுராதபுரத்தில் இளைஞர்கள் குழுவொன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு ரூபாயை உண்டியல்களில் போடுமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

குறித்த  உண்டியல்களில் சேகரிக்கப்படும் பணம் தபால் நிலையத்தினூடாக மணி-ஆர்டர் மூலம் அமைச்சருக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.