Published by T. Saranya on 2022-05-26 12:22:21
(எம்.எம்.சில்வெஸ்டர்)
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியன்று லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக லாப் நிறுவனத் தலைவர் கே. எச்.வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
"எதிர்வரும் 6 நாட்களில் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெளியிடும் சாத்தியக்கூறு உள்ளது. கடன் உறுதிப் பத்திரங்கள் திறக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைப்படுத்த முடியும்" என்றார்.
லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் கடந்த பல மாதங்களாக பெரும் கஷ்டத்தை எதிர்கொண்டு வரும் லாப் வாடிக்கையாளர்கள், அண்மைக் காலமாக பெருந்தொகை பணத்தை செலவழித்து லிட்ரோ வெற்று சிலிண்டர்களையும் பெற்றுக்கொண்டு லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.