லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரியை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதவான் மொஹமட் சஹா்படீன் இன்று (27) பிறப்பித்துள்ளார்.

50 அயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் பெறுமதியான மூன்று தனிநபர் பிணையிலும் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ புலனாய்வு அதிகாரி கடந்த ஜுலை 16 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.