2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் இன்று (25) வெளியாகியுள்ளதாகபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சையின் மற்றுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியானது |  Virakesari.lk

இதன்படி, www.donets.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும், www.results.exams.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாகவும் மீள் திருத்தப் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகளுக்காக 32,528 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்