சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் இராஜாங்க அமைச்சுக்களை ஏற்பர் - அமைச்சர் மஹிந்த அமரவீர தகவல்

By Vishnu

25 May, 2022 | 08:58 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் நாட்களில் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

May be an image of 9 people, people sitting and people standing

அமைச்சுப்பதவிகளை ஏற்றுள்ள எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை.

நாம் எடுத்த தீர்மானம் தொடர்பில் அடுத்த வாரம் கட்சியின் உயர் பீடத்திற்கு தெளிவுபடுத்துவோம். எம்மில் சிலர் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவியேற்பர்.

மத்திய குழுவிற்கு எமது முடிவுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு தயாராகவே உள்ளோம். எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டியேற்படும் என்று எதிர்பார்க்கவில்லை.

எமக்கான முக்கியத்துவம் தொடர்பில் கட்சி தலைவர் அறிவார். எனவே அவர் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்றும் நாம் எண்ணவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right