(என்.வீ.ஏ.)

பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கு இடையில் டாக்கா, ஷியரே பங்ளா தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

Dhananjaya de Silva celebrates a fifty, Bangladesh vs Sri Lanka, 2nd Test, Mirpur, 3rd day, May 25, 2022

முதல் இன்னிங்ஸில் இன்னும் 5 விக்கெட்கள் மீதமிருக்க பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கையை அடைய இன்னும் 83 ஓட்டங்கள் இலங்கைக்கு தேவைப்படுகின்றது. பங்ளாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 365 ஓட்டங்களைப் பெற்றது.

Angelo Mathews and Dhananjaya de Silva steadied Sri Lanka after two quick wickets, Bangladesh vs Sri Lanka, 2nd Test, Mirpur, 3rd day, May 25, 2022

இலங்கை அணியை ஏஞ்சலோ மெத்யூஸும் தனஞ்சய டி சில்வாவும் கட்டியெழுப்பு முயற்சித்தபோது மழை குறுக்கிட்டு ஆட்டம் 4 மணித்தியாலங்கள் தடைப்பட்டது.

Persistent rain delayed the start of the second session, Bangladesh vs Sri Lanka, 2nd Test, Mirpur, Day 3, May 25, 2022

போட்டியின் 3ஆம் நாளான புதன்கிழமை (25) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியது.

இராக்காப்பாளன் கசுன் ராஜித்த ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் திமுத் கருணாரட்ன 80 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

Shakib Al Hasan celebrates after sending back Dimuth Karunaratne for 80, Bangladesh vs Sri Lanka, 2nd Test, Mirpur, Day 3, May 25, 2022

முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸும் தனஞ்சய டி சில்வாவும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணிக்கு சேர்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், பகல் போசன இடைவேளைக்கு 5 நிமிடங்கள் இருந்தபோது மழை பெய்ததால் வெளையோடு இடைவேளை வழங்கப்பட்டது. (இலங்கை 210 - 4 விக்.)

Dimuth Karunaratne started off the day steadily before being bowled by Shakib Al Hasan for 80, Bangladesh vs Sri Lanka, 2nd Test, Mirpur, Day 3, May 25, 2022

தொடர்ந்து மழை பெய்ததால் பகல் போசன இடைவேளைக்குப் பின்னரான இரண்டாவது ஆட்டநேரப் பகுதி கைவிடப்பட்டதுடன் கடைசி ஆட்ட நேர பகுதியில் ஒரு மணி நேர தடைக்குப் பின்னரே ஆட்டம் தொடர்ந்தது,

ஆட்டம் மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு தொடர்ந்தபோது மெத்யூஸும் தனஞ்சய டி சில்வாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினர்.

Kasun Rajitha was bowled by Ebadot Hossain in the first over of the day, Bangladesh vs Sri Lanka, 2nd Test, Mirpur, Day 3, May 25, 2022

இருவரும் 5ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தனஞ்சய டி சில்வா, மத்தியஸ்தரின் மீளாய்வு தீர்ப்பில் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஷக்கிப் அல் ஹசன் வீசிய பந்தை தனஞ்சய டி சில்வா தடுத்தாடியபோது பந்து துடுப்பை உராய்ந்தவாறு விக்கெட்காப்பாளர் லிட்டன் தாஸின் கைகளில் தஞ்சம்புகுந்தது.

பிடிக்கான கேள்வியை லிட்டன் தாஸ் எழுப்பியபோது ஆட்டமிழக்கவில்லை என  கள  மத்தியஸ்தர் அறிவித்தார். ஆனால், மத்தியஸ்தரின் தீர்ப்பை மீளாய்வுக்கு உட்படுத்த  லிட்டன் தாஸ்   கோரியதை அடுத்து சலன அசைவுகளில் அல்ட்ரா எஜ் உதவியுடன் தனஞ்சய டி சில்வா ஆட்டமிழந்ததாக 3ஆவது மத்தியஸ்தர் தீர்மானித்தார்.

ஏஞ்சலோ மெத்யூஸ் 58 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

எண்ணிக்கை சுருக்கம்

பங்களாதேஷ் 1ஆவது இன்: 365 (முஷ்பிக்குர் ரஹிம் 175 ஆ.இ., லிட்டன் தாஸ் 141, கசுன் ராஜித்த 64 - 5 விக்., அசித்த பெர்னாண்டோ 93 - 4 விக்.)

இலங்கை 1ஆவது இன்: (3ஆம் நாள் ஆட்டநேர முடிவில்) 282 - 5 விக். (திமுத் கருணாரட்ன 80, ஏஞ்சலோ மெத்யூஸ் 58 ஆ.இ., தனஞ்சய டி சில்வா 58, ஓஷத பெர்னாண்டோ 57, ஷக்கிப் அல் ஹசன் 59 - 3 விக்.)