(குமார் சுகுணா)

உலகளவில் மிக பெரிய அச்சுறுத்தலை  ஏற்படுத்தி வரும் கழிவு பொருள் எதுவென்றால் நாம் அன்றாடம்  பயன் படுத்திவரும்  பிளாஸ்டிக்தான். ஏன் என்றால்  பிலாஸ்டிக் மக்காத பொருள்.

எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் பிலாஸ்டிக்கை எளிதில் மக்கவைக்க முடியாது. பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் கலந்து மக்க 450 ஆண்டுகள் ஆவதால் அது சுற்றுச்சூழலுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.

பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்

 

இந்த நூற்றாண்டில் கடற்கரையில் அதிகளவிலான பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் வீசிவதால் கடல் சூழலியல் உலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது அறியப்பட்டதோடு. கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறின. 

நாம் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கடலிலும் நீர் நிலைகளிலும்  வீசிவிடுகிறோம் .

குறிப்பாக மழைகாலங்களில் ஆறுகள் மற்றும் நீரோடைகள் ஊடாக செல்லும் தண்ணீர், அதனுடன் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களையும் கடலுக்கு அடித்து கொண்டு செல்கிறது .

இவ்வாறு கடலுக்கு வந்து சேரும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை மீன்கள் தமது உணவு என எண்ணி அவற்றை உண்டு விடுகின்றன .

இந்தியாவில் வலிமையான பிளாஸ்டிக் சாலைகள்! - முன்னோடியாகத் திகழும் தமிழகம்  #MyVikatan | India is using plastic waste to build roads

இதன் விளைவாக  பெரும்பாலான மீன்களின் உடலுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்து இருப்பது பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டன மீன்களை நாம் உண்ணுவதால் இந்த நஞ்சுப் பொருள் எமது உடலுக்குள் .சென்று எம்மையும் பாதிக்கின்றது. .பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் நமது உடலில் சேரும் போது தசைகள் பாதிக்கப்படும் .

அத்துடன் நமது நரம்பு மண்டலங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு மூளையில் தாக்கத்தை உருவாக்கும். மேலும் இனப்பெருக்க விருத்தி பிரச்சினைகள் ஏற்படும், தைரோய்டு பிரச்சினை மற்றும் புற்றுநோய் என்பனவும் ஏற்படுவதற்கு அதிக சந்தர்ப்பம் உண்டு . அத்துடன்  பிளாஸ்டிக்  காரணமாக மீன்கள் இனம் விரைவாக அழியும் நிலை தோன்றும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதே போல நாம் பாவித்து வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையுடன் கிடக்கும் .போது  மாடுகள், ஆடுகள் .போன்ற  கால்நடைகள் கூட  அவற்றை உட்கொள்கின்றன.

இது பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகின்றன.  இவ்வாறு பிளாஸ்டிக்    சூழலை மிகவும் அச்சுறுத்தி வருவதால் உலகில் பல நாடுகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைக்கு தடை விதித்து வருகின்றன.

நமது அண்டை நாடான இந்தியாவில் கூட  குறிப்பாக தமிழகத்தில் மஞ்சள் பை மீள் அறிமுகம் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கின்றது. 

நமது நாட்டிலும் பிளாஸ்டிக். பைகளின் பாவணைக்கு பதிலாக வேறு மக்க கூடிய பிளாஸ்டிக் பைகள் அறிமுகப்படுத்தபட்டன.  ஆனாலும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருந்தாலும் பிளாஸ்டிக் பாவனை இருந்தே வருகின்றது.

இந்நிலையில், பிளாஸ்டிக் மக்காது என்பதனை பொய்யாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றிக்கண்டுள்ளனர் . பிளாஸ்டிக்கை 16 மணி நேரத்தில் மக்கச்செய்யும் பாலியஸ்டர் ஹைட்ரலேஸ் (PHL7) என்ற நொதியத்தை ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கல்லறையில் மக்கிய பொருள் ஒன்றிலிருந்து இந்த நொதியம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நொதியத்தை தங்களது ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்ற விஞ்ஞானிகள் நிகழ்த்திய சோதனையில் அந்த நொதியம் 16 மணி நேரத்திற்குள் பாலிஎதிலீன் டெரெப்தாலேட்டை (PET) 90 சதவீதம் சிதைக்க முடிந்தது என்பதைக் கண்டறிந்தனர்.

பிளாஸ்டிக்கை மக்கச் செய்ய ஜப்பானில் 6 ஆண்டுகளுக்கு முன்பே LLC என்ற ஒரு நொதியம் கண்டறியப்பட்டதாகவும் ஆனால் தாங்கள் கண்டறிந்துள்ளது அதை விட 2 மடங்கு வேகமானது என்றும் ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிளாஸ்டிக்குகளை சிதைக்க PHL7க்கு எந்த வினையூக்கிகளும் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 இந்த கண்டுபிடிப்பு பிளாஸ்டிக் பயன்பாட்டில் உலக அளவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறைகளை நிறுவுவதில் இந்த கண்டுபிடிப்பு முக்கிய பங்களிப்பைச் செய்ய முடியும் என்று லீப்ஜிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளர் வொல்ப்காங் ஜிம்மர்மேன் தெரிவித்துள்ளார்.