நாட்டில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை (26) இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படும் - லிட்ரோ நிறுவனம் |  Virakesari.lk

லிட்ரோ நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது நாளாக உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையில் தற்போது கடும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.