யாழுக்கு 20ஆயிரம் அரிசி பொதிகள் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் 

Published By: Digital Desk 4

25 May, 2022 | 05:08 PM
image

இந்தியாவின் தமிழகத்தால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட உதவித் திட்டத்தில் முதற்கட்டமாக  சுமார் 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7500 கிலோ பால் மாவும் கிடைக்கவிருக்கின்றது. இதனை முன்னுரிமை அடிப்படையில் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கவிருக்கின்றோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

Articles Tagged Under: கணபதிப்பிள்ளை மகேசன் | Virakesari.lk

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

பால்மாவைப் பொறுத்தவரையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

இதனை விட இந்திய அரசினால் மீனவர்கள் விடுத்த கோரிக்கைக்கிணங்க 15,000 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. அது மிக விரைவில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு குறிப்பாக அனலைதீவு எழுவைதீவு நயினாதீவு நெடுந்தீவு பகுதி மீனவர்களுக்கும் மாத்திரம் பகிர்ந்தளிக்கப்படும்.

இது மீனவர் சங்கங்கள், கடற்றொழில் திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படும்.சுமார் 705 மீனவர்கள் இந்த நன்மையைப் பெறவுள்ளனர், என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47