எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த 137 சந்தேகநபர்கள் கைது

Published By: Vishnu

25 May, 2022 | 09:43 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருட்களைப் பெற்று அதனை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 137 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த சில தினங்களில் 429 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்புக்களின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 000 லீற்றர் பெற்றோல் , 22 000 லீற்றர் டீசல், 10 000 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு பதுக்கி வைத்து எரிபொருளை விற்பனை செய்பவர்கள் தொடர்பான தகவல்களை 118 மற்றும் 1997 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்க முடியும்.

எரிபொருட்களை பதுக்குதல் மாத்திரமின்றி , அவற்றில் ஏனைய திரவங்களைக் கலந்து விற்பனை செய்கின்றமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட நிபுணர்களுடன் இணைந்து பொலிஸாரினால் இந்த சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47