சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வகைபடுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்துக்கு பொலிஸாரின் பங்களிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.