உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளான மொஹமட் இல்ஹாம், மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தை பிணையில் விடுதலை

Published By: Digital Desk 4

25 May, 2022 | 06:27 PM
image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குண்டுதாரிகளான இருவரின் தந்தையை பிணையில் விடுதலை செய்து கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் : 25 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு  விசாரணை நாளை | Virakesari.lk

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் குண்டுதாரிகள் இருவரின் தந்தையான மொஹம்மட் இப்ராஹீம் என்பவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் உள்ள இரண்டு முக்கிய ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களுக்கு மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகிய சகோதரர்களே பிரதான சூத்திரதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களின் தந்தையான மொஹம்மட் இப்ராஹீம் ஹாஜீயாரையே இவ்வாறு பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் தந்தை இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீமை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ( 25) உத்தர்விட்டது.

 கொழும்பு  மேல் நீதிமன்றின் நீதிபதி நவரட்ன மாரசிங்க இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீம் உள்ளிட்ட மூவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  இப்ரஹீம் ஹாஜியாருக்கு மேலதிகமாக, அவரது மேலும் இரு புதல்வர்களே அவ்வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.  

இந் நிலையில்   இப்ராஹீம் ஹாஜியார் என அறியப்படும் யூசுப் மொஹம்மட் இப்ராஹீமுக்கு பிணையளித்த நீதிமன்றம்  அவரது மகனான  மொஹம்மட் இப்ராஹீம் ஹிஜாஸ் அஹமட்டையும் பிணையில் செல்ல அனுமதியளித்தது. எனினும் இளைய மகனான  மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயீலை பிணையில் விடுவிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

 இப்ராஹீம்  ஹாஜியாரையும் அவரது ஒரு மகனையும் ,  தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை,  தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த மேல் நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும்  முதல், இறுதி ஞாயிறு தினங்களில் சி.ஐ.டி.யில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.  அத்துடன் அவர்களது வெளிநாட்டு பயணங்களை தடை செய்த நீதிமன்றம் கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவும் பணித்தது.

பிணைக் கோரி முன் வைக்கப்பட்ட விடயங்களில்  பிரதிவாதிகளின் உடல் நலம் மற்றும்  நீண்ட நாட்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றமை ஆகிய இரு விடயங்களையும் விஷேட  காரணிகளாக கருதி பிணையளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.  மொஹம்மட் இப்ராஹீமின் கண்ணில் மேற்கொள்ளப்பட்டுள்ள  சத்திர சிகிச்சை,  ஹிஜாஸுக்கு 3 பிள்ளைகள் இருப்பது ஆகியனவும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். 

எனினும் 3 ஆம் பிரதிவாதி மொஹம்மட் இப்ராஹீம் இஸ்மாயிளை பிணையில் விடுவிக்க  விஷேட காரணிகள் இல்லை எனக் கூறி அவரை பிணையில் விடுவிக்க நீதிபதி மறுத்தார்.

பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மன்றில் ஆஜரானதுடன்,  வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபருக்காக பிரதி சொலிசிட்டர்  ஜெனரால் லக்மினி கிரியாகம  ஆஜரானார். இவ்வழக்கு மீள ஜூன் 30 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திருந்தும்  அது தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்காமல்  தகவல்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17