இவை இளைஞர்கள் ஆக்கத்திறனுடன் சிந்திப்பதற்கும் புத்தாக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் மற்றும் கவர்ச்சிகரமாக, யாவரையும் ஈர்க்கும் வகையில் போராட்டத்தினை கொண்டு நடாத்துவதற்கும் இந்த விஞ்ஞான தொழிநுட்பத்துடன் அவர்களுக்கு இருக்கும் பரிட்சயம் முக்கிய காரணமெனலாம். கடந்த காலங்களில் ஏனைய நாடுகளில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களில் இருந்து பாடங்களை கற்று அதனை இங்கு நடைமுறைப்படுத்தி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இவை அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருப்பதுடன்ரூபவ் போராட்டத்தினை முறியடிப்பதற்காக எடுத்த முயற்சிகளையும் பலவீனப்படுத்தியுள்ளன.

இவை நாம் மரபு ரீதியாக பாடப்புத்தகங்களில் படிக்கின்ற ஜனநாயகப் போராட்டம் அல்லது சமூக இயக்கம் அல்லது மக்கள் போராட்டத்தில் இருந்து முற்றாக வேறுபட்டுள்ளது. ஆகவே இலங்கையில் ஜனநாயகம் தொடர்பாக ஆய்வு செய்வோர் எதிர்காலத்தில் இந்தப் புதிய கோலத்தினையும் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று இலங்கையில் ஜனநாயகம் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறுவது பொருத்தமாகும்.

மக்கள் போராட்டம் தொடர்பாக எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாத இலட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் காலிமுகத்திடலில் அணிதிரண்டு இருப்பது பிறிதொரு முக்கிய விடயமாகும். இவர்கள் ஜனநாயகத்தின் விழுமியங்களைரூபவ் ஜனநாயகப் போராட்டம், அகிம்சா வழிப்போராட்டம் தொடர்பாக பிரயோக ரீதியான அனுபவத்தினை, அறிவினைப் பெற்று வருகின்றனர். இதனை இந்தப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதத்தினை நோக்கும்போது தெளிவாகின்றது. சிறப்பான நூலகம் ஒன்று தாபிக்கப்பட்டிருப்பது இதனை மேலும் உறுதி செய்கின்றது. கடந்தகால போராட்டங்கள் இத்தகைய ஒழுங்கமைப்புகளை கொண்டிருக்கவில்லை.

போராட்டங்களில் வெளிப்படும் பிரதான முழக்கங்கள் இந்தப் போராட்டங்களின் ஊடாக எழுப்பப்படும் மிக முக்கிய கோசங்களாக காணப்படுவது பின்வரும் விடயங்களாகும்.

(1)இருக்கின்ற ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

(2)ஊழல், மோசடி இல்லாத இலங்கையினை உருவாக்குதல் மற்றும் ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.

(3)ராஜபக்ஷ குடும்பத்தினர் உட்பட ஏனைய அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பொதுமக்களின் பணம் மீளப்பெறப்படுதல் வேண்டும் மற்றும் அவர்களின் சொத்துக்கள் பொதுவுடைமை ஆக்கப்படுதல்.

(4)பொதுநிறுவனங்கள் மிகவும் பலவீனமாக காணப்படுவதால் அவை மறுசீரமைக்கப்பட வேண்டும், சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பது பிரிதொரு கோரிக்கை - இங்கு சட்டமா அதிபர் காரியாலயம், கணக்காய்வாளர் நாயகம் காரியாலயம்ரூபவ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுரூபவ் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களை வலியுறுத்தி வருகின்றனர்.

(5)அரசியல்வாதிகள் கொள்ளையடித்த சொத்துக்களை மீளப்பெறுவதற்கான சட்டங்களை அறிமுகம் செய்தல் மற்றும் சொத்துக்களை பகிரங்கப்படுத்துதல் தொடர்பான சட்டங்களை பலப்படுத்துதல்.

(6)குற்றவியல் நீதி முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் - இதன் மூலம் சட்டத்தினை யாவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் சட்டத்தினை அமுல்படுத்தும் நிறுவனங்களை அரசியல் கலப்பற்ற சுயாதீனமான நிறுவனங்களாக மாற்ற வேண்டும்.

(7)மக்களின் அதிகாரம் ஆட்சியில் இருப்பவர்களின் அதிகாரத்தினை விட உயர்வானது என்ற கோசம் தொடர்ந்தும் முன்வைக்கப்படுகின்றது. இது மக்கள் இறைமையின் முக்கியத்துவத்தினை, மக்களே ஆட்சி அதிகாரத்தின் மூலாதாரம் என்பதனை மீண்டும் ஒரு முறை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

இச்செய்தி மக்களை விழிப்புணர்வு அடையச் செய்துள்ளதுடன் வெறுமனே இவ்வளவு காலமும் வாக்காளராக இருந்த மக்கள் பிரஜைகளாக மாறுவதற்கு வழி செய்துள்ளது. இது ஒரு முக்கியமான மாற்றமாகும். 

ஜனநாயகத்தினை மற்றும் நல்லாட்சியினை பேணுவதற்கு செயலூக்கமுள்ள பிரஜைகள் மற்றும் தர்க்க ரீதியாக சிந்திக்கும், அரசாங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும், விமர்சிக்கும் ஆட்சிமுறை செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுகின்ற பிரஜைகள் பெரிதும் அவசியம் என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உலகறிந்த அரசியல் விஞ்ஞான பேராசிரியையான பிப்பா நொறிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் குறுகிய இலாபங்களுக்காகவும்ரூபவ் பொருள் சார்ந்த நன்மைகளுக்காக வெறும் வாக்காளர்களாக இருந்த இலங்கை மக்கள் இன்று பிரஜைகளாக மாறி வீதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர மாற்றத்தை கோரி நிற்பது ஒரு புதிய அரசியல் கலாசாரத்திற்கான ஆரம்பமாக அமைந்துள்ளது எனலாம். வெறும் உணர்ச்சிகளுக்கும்ரூபவ் இனரூபவ் மத தேசியவாத சிந்தனைகளாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த தென்னிலங்கை மக்கள் மாத்திரமின்றி ஏனைய

சமூகத்தவர்களும் இவ்வாறான மாற்றத்தினை தழுவியிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

(8)இவை எல்லாவற்றையும் விட பிறிதொரு முக்கிய செய்தி இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது சிறுபான்மை மக்களை பொறுத்தவரை மிக முக்கியமான விடயமாகும். அது “வேற்றுமையில் ஒற்றுமைரூஙரழவ் என்ற செய்தி ஆகும். சகல சமூகத்தவரும் ஒன்றாக போராடுவதுரூபவ் உறங்குவது, உணவுண்பது, ஒன்றாக கைகோர்த்துக் கோசம் இடுவது, பிரச்சாரம் செய்வது போன்ற செயற்பாடுகள் யாவும் நாம் ‘இலங்கையர’ இங்கு சிங்களம், தமிழ், முஸ்லீம் என்ற வேறுபாடு இல்லை என்ற செய்தியினை வெளிப்படுத்தி உள்ளது. 

இன மற்றும் மதவாதமற்ற இலங்கை வேண்டும் என்பது சிறுபான்மை இனத்தவரது நீண்ட கால கனவாகும். அதற்கான ஆரம்பமாக இதனை நாம் நோக்க முடியும். இந்தப் போராட்டம் முழுவதும் இனவாதத்திற்கு எதிராக கோசம் எழுப்பப்படுவது, பன்மைத்துவம் மதிக்கப்படுவது, ஏற்றுக்கொள்ளப்படுவது, சமத்துவம், சமவாய்ப்பு ஆகிய சித்தாந்தங்கள் பேணப்படுவது தொடர்ச்சியாக காணக் கூடியதாக உள்ளது. மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டமை இனவாதத்திற்கு எதிரான முக்கிய செய்தியை பறைசாற்றுகிறது.

1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘சிங்களம் மட்டுமே’ சட்டம் இந்த நாட்டினை சீர்குலைந்துள்ளது என்பதனையும், இனவாதம் இலங்கை தேசத்தினை சுதந்திரத்திற்குப் பின் 74ஆண்டுகளாக மிக மோசமான அழிவுக்கு இட்டுசென்றுள்ளது என்பதனையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள இளைஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது இதன் மூலம் புலப்படுகின்றது. ஆயினும் இத்தகைய போக்குகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது சிறுபான்மை சமூகம் முன்வைக்கும் பிரதான கேள்வியாகும். இதற்கு அவர்களின் கடந்தகால அனுபவங்கள் காரணமாக அமையலாம்.

பேராசியர் ஜயதேவ உயன்கொட நாடுதழுவிய ரீதியில் இடம்பெறும் போராட்டங்களின் ஊடாக கோரப்படும் System change என்பது பின்வரும் விடயங்களை வலியுறுத்துவதாக வாதிக்கின்றார்.

1.ஆதிக்கமிக்க அரசியல் கலாசாரத்தினை மாற்றுதல்

2.பொதுக்கொள்கை உருவாக்க செயன்முறை மற்றும் நடைமுறையினை மாற்றுதல்.

3.ஆளும் வர்க்கம் அரசு சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ளும் நடைமுறையினை மாற்றுதல்

4.இலங்கையினுடைய பிரதிநிதித்துவ அரசாங்கம் வீழ்ச்சியடைந்து செல்லுதல்

5.அசமத்துவம் மற்றும் அநீதிகளுக்கு காரணமாக அமைந்துள்ள சமூக, பொருளாதார முறையில் மாற்றத்தினை ஏற்படுத்த விரும்புகின்றார்கள். போராட்டக்காரர்கள் முன்னுள்ள சவால்கள் எவ்வாறாயினும் இந்தப் போராட்டங்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் மாறாக பிறிதொரு முக்கிய கேள்வியினையும் எழுப்புகிறது. இலங்கையினுடைய கடந்தகால நிகழ்வுகள், ஆழமாக வேறுன்றியுள்ள இன,மத, தேசியவாதம் என்பவற்றினை வைத்து நோக்கும் போது ஒரு தீவிர ஐனநாயக மறுசீரமைப்பு இந்தப் போராட்டங்கள் மூலம் ஏற்படுமா என்ற வினாவிற்கு இன்னும் விடைகாண முடியாமல் உள்ளது. இப்போராட்டம் வெறுமனே ராஜபக்ஷ குடும்பத்தினரை விரட்டியடிப்பதுடன் மட்டுப்படுத்தப்படுமா? நிறுத்தப்படுமா? அல்லது அதற்கு அப்பால் சென்று இந்த நாட்டின் ஆட்சிமுறையில் மற்றும் ஜனநாயக கட்டமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி இப் போராட்டங்கள் நீடிக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். இவை சிறுபான்மை மக்களைப் பொருத்தவரை முக்கியமான கேள்வியாகும். காரணம் ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதன் முலம் மாத்திரம் இந்த நாட்டில் சகல சமூகத்தவர்களும் சம உரிமைகளுடன் வாழக்கூடிய இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்ப முடியாது.

பன்மைத்துவம், சுதந்திரம், சமவாய்ப்பு, யாவரையும் உள்வாங்கும் ஆட்சி, சிறுபான்மையினருக்கான நீதி, அரசியல் தீர்வு என்பன கிடைக்கப்போவதில்லை. அவர்களை விரட்டியடிப்பதன் மூலம் மாத்திரம் நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வினை காணமுடியாது. ஆகவே தற்போதையப் போராட்டங்களில் இந்த விடயங்களும் பிரதிபலிக்கப்பட வேண்டும். இது குறித்த புரிதலை சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இது தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் சம உரிமைகளுடன் வாழக்கூடிய புதிய இலங்கையினை கட்டியெழுப்புவதற்கான நல்லதொரு வாய்ப்பாக தென்படுகின்றது.

இந்த போராட்ட கலாசாரம் அதனை பறைசாற்றுகின்றது. இந்த புரிதலை ஏற்படுத்துவதில் சிறுபான்மை மக்களை பிரிதிநித்துவம் செய்யும் சிவில் அமைப்புகள், ஜனநாயகம், சிறுபான்மை மக்களின் உரிமைகள், நல்லிணக்கம் தொடர்பாக செயற்படும் அமைப்புகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினை சார்ந்த இளைஞர்களுக்கும் உண்டு. காரணம் தற்போதைய நிலையில் சகல இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் மனோநிலைரூபவ் எதிர்பார்ப்பு, உணர்ச்சிகள், ஆவேசம் என்பன பெரியளவில் வேறுபடுவதாக தெரியவில்லை.

புரிதலுக்கான இடைவெளியொன்று காணப்படுகின்றது. அதனை எந்தளவுக்கு சரியாக பயன்படுத்தப் போகின்றோம் என்பது முக்கியமாகும். எவ்வாறாயினும் இது இலகுவான காரியமல்ல. இந்தப்புரிதல் இளைஞர்கள் மத்தியில் இலகுவில் ஏற்படலாம். ஆனால் பெரும்பான்மை சமூகத்தின் கட்டமைப்பில் மதத்தலைவர்களின் செல்வாக்கு அதிகமாகும். இந்நிலை கிராமப்புறங்களில் அதிகளவில் காணப்படுகின்றது. அதற்கப்பால் சிங்கள சமூகத்தில் பல சமூக வகுப்புகள் காணப்படுகின்றன. 

ஆகவே இந்தப் புரிதல் அவர்கள் மத்தியில் ஏற்படுமா என்பது பிறிதொரு விடைக் காண வேண்டிய வினாவாகும். 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அரசியல் தத்துவவியலாளரான ஹன்னா அரெண்ட் (Hannah Arendt) என்பாரின் கருத்தினை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். அவர் இத்தகைய போராட்டங்களை அரசியல் தளங்கள் (political spaces) எனக் குறிப்பிடுகின்றார். இங்கு பிரஜைகள் சுதந்திரமாக உள்நுழைவது, சக பிரஜைகளை சுதந்திரமாக சந்திப்பது, சுதந்திரமாக விவாதிப்பது, பொது விடயங்கள் தொடர்பான தமது கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்துக்கொள்வது, அது குறித்து வாதிடல்ரூபவ் மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தல் மற்றும் பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயற்படுவதனை அவதானிக்க முடியும் என வாதிடுகின்றார்.

இக்கருத்து காலிமுகத்திடல் உட்பட நாட்டில் ஏனைய பாகங்களில் தாபிக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ போராட்ட தளங்களில் அவதானிக்க முடியும். இங்கு இன, மத, மொழி, பிரதேச, சாதி, வர்க்க, அரசியல் மற்றும் பால்நிலை வேறுபாடுகள் கருத்தில கொள்ளப்படுவதில்லை – போராட்டத்திற்கான பொது நோக்கமே முன்னிலைப்படுத்தப்படுகின்றது என்பதனை இதன் மூலம் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

ஆகவே இந்த அரசியல் தளங்களை தீவிர ஜனநாயக மற்றும் ஆட்சி முறை மாற்றத்திற்கான களமாக பயன்படுத்த வேண்டிய பொருப்பு சகல சமூகத்தவர்களும்ரூபவ் சம உரிமைகளுடன் வாழக்கூடிய இலங்கையினைக் கட்டியெழுப்ப விரும்பும் அனைவரினதும் பொறுப்பாகும்.

இத்தகைய வாதத்தினை முன்வைப்பதற்கான காரணம் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசு ஓர் இனத்துவ அரசு என்ற நிலையினை தொடர்ச்சியாகவே பேணி வந்துள்ளது. இது சிங்கள-பௌத்த பேரினவாத சிந்தனையினை அடிப்படையாகக் கொண்டு, சுதந்திரத்திற்குப் பின்னர் பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும்,  அரசியல் தலைவர்களும் இக்கருத்தினை ஆழமாக வேரூண்ட செய்துள்ளனர். இந்த சிந்தனை (Ethnocratic state) என்பது இன்று நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இதனை முற்றாக மாற்றுவது அல்லது மறுசீரமைப்பது அவ்வளவு இலகுவாக காரியமாக இருக்காது. பெரும் சவால் மிக்க காரியமாக அமையும். ஒரு புரட்சிகரமான மாற்றம் அல்லது தீவிர ஜனநாயக மறுசீரமைப்பு நடந்தால் அன்றி அது உடனடியாக சாத்தியமடைய வாய்ப்பில்லை. 

நோர்வே நாட்டின் உயிர் அறிவியல்கள் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்த நடராஜா சன்முகரத்தினம் அவர்கள் கட்டுரையாசிரியருக்கு அண்மையில் அனுப்பிய மின்னஞ்சலிலும் இக்கேள்வியினை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் வீழ்ச்சியும் அதிருப்தியும் இந்தப் போராட்டங்கள் இன்னொரு பக்கம் 74ஆண்டு கால வரலாற்றினைக் கொண்ட பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை, அதன் தரத்தினை கேள்விக்குட்படுத்தியுள்ளது. 

காரணம், பிரதிநிதித்துவ ஜனநாயகம் இலங்கையர்களை வெறும் வாக்காளர்கள் என்ற விட்டத்துக்குள் மாத்திரமே மட்டுப்படுத்தியுள்ளது. அதனைத்தாண்டி ஆட்சி முறை செயற்பாடுகளில் சாதாரண மக்களுக்கு பெரியளவிலான வகிபங்கு வழங்கப்படவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

அந்தவகையில் இலங்கையில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது உயர்குழாம் வர்க்கத்தின் அபிலாசைகள் மற்றும் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாகவே எப்போதும் இருந்து வந்துள்ளது. பெரும் வர்த்தகர்களின் மற்றும் உயர் அரசியல் வரக்கத்தின் நன்மைகளுக்காவே பொதுக் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. இது தென்னாசிய நாடுகளில் காணப்படும் பொதுவான பண்பாகும்.

இப்பின்புலத்திலேயே மக்கள் போராட்டங்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தினை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அதில் காணப்படும் அடிப்படை குறைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். பெரும் செல்வந்தர்களையும், அரசாங்கத்திற்கு வருமான வரியினை முறையாக செலுத்தாமல் சட்டத்தினை மீறி செயற்படும் வர்த்தகர்களையும் இலங்கையினுடைய தேர்தல் ஜனநாயகம் பாதுகாக்கின்றது. இது பெரிதும் வருந்ததக்க விடயமாகும்.

தொடரும்…

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ்
அரசியல் விஞ்ஞானத்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்