அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தை இந்தியாவின் மிகப்பெரிய சினிமா திரையரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Andhra couple marriage in USA Broadcast at Bahubali Theater

இந்தியாவில்  ஆந்திர மாநிலம்  நெல்லூரை  சேர்ந்த பர்வத ரெட்டி -  ஜோதி தம்பதியினரின் மகன் ரோஹித் ரெட்டி என்ற 23 வயதான மகன் ஒருவர் இருந்துள்ளார். 

இந்நிலையில் மகனுக்கு ரிஷிதா  என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

ரோஹித் அமெரிக்காவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

ரிஷிதாவும் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்பிஏ படித்துவருகிறார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரது பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, திருமணம் செய்துவைக்க இருவீட்டாரும் முடிவுசெய்தனர்

அதன்படி அமெரிக்க நேரப்படி மே 21 ஆம் திகதி (இந்திய நேரப்படி மே 22 ஆம் திகதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Andhra couple marriage in USA Broadcast at Bahubali Theatre

திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் திருமணத்திற்கு செல்ல ரோஹித் - சுனிதாவின் பெற்றோருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் இருவீட்டாரும் சோகமடைந்தனர்.

மணமக்களின் பெற்றோர் திருமணத்தை காண அமெரிக்கா செல்ல முடியாத சூழ்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய  சினிமா திரையரங்காக கருதப்படும் வி செல்லுலாயிட் நிறுவனத்தின் வி ஏபிக் திரையரங்கத்தில் திருமண நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டனர். 

இதனைத் தொடர்ந்து தியேட்டரில் மாலை, தோரணங்கள் என அலங்காரம் செய்யப்பட்டது.

அமெரிக்காவில் மங்கள வாத்தியம் முழங்க ரோஹித் - சுனிதா திருமணம் நடைபெற, அவர்களது உறவினர் அனைவரும் அந்த காட்சியை நேரலையில் பார்த்து மணமக்களை வாழ்த்தினர். 

திருமணத்தில் நேரில் கலந்துகொண்ட உணர்வு கிடைத்ததாக இந்த தியேட்டருக்கு வந்த மணமக்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம், பலரையும் வியப்படைய செய்துள்ளது.