பதுளையில் 140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது

By Vishnu

25 May, 2022 | 03:18 PM
image

பதுளை - ஹாலிஎல பிரசேத்தில் 140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹாலி எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவர பகுதியிலுள்ள வீதித்தடையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பெற்றோல் கொண்டு சென்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 41 வயதுடைய ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபரிடம் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right