காஷ்மீர் பெண்களின் கையடக்கத் தொலைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு

Published By: Vishnu

25 May, 2022 | 01:00 PM
image

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பெண்களின் உரிமைகள் 2019 ஆகஸ்ட் மாதத்திற்கு  முன்னர் ஆண் ஆதிக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டது என்பது குறித்த தவறான எண்ணங்களை நுணுக்கமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் அதிக மக்கள் தொகை மற்றும் முற்போக்கான பெருநகரங்களில் உள்ள பெண்களை விட ஜம்மு மற்றும் காஷ்மீர் பெண்கள் கையடக்க தொலைப்பேசிகள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் முன்னேறியுள்ளனர் என்பதை புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியாவின் சமூக - பொருளாதார புள்ளிவிவரத் தகவல்களை வழங்கும் ஒரு சுயாதீன மையத்தின் புள்ளிவிவரங்களின் புதிய தரவு மூலம் இநத விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தரவுகளின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் 75.2 சதவீத பெண்கள் கையடக்க தொலைப்பேசிகளை பயன்படுத்துகின்றனர். இது இந்தியாவில் 12 வது மிக உயர்ந்த விகிதத்தினை வெளிப்படுத்துகின்றது. இதற்கு நேர்மாறாக, டெல்லி உட்பட மெட்ரோ நகரங்களில் பெண்களின்  கையடக்க தொலைப்பேசிகளின்  உரிமையாளர்களின் விகிதம் 73.8 சதவீதமாகும். இது ஜம்மு மற்றும் காஷ்மீரின் மொத்த சராசரியை விட மிகக் குறைவு.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் பல முக்கிய பெருநகர மாநிலங்களுக்கு இடையே சராசரியாக 20 சதவீத வித்தியாசத்தை குறித்த தரவு வெளிப்படுத்தியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் குறிப்பாக காஷ்மீரில் உள்ள பெண்களின் உரிமைகள் 2019  ஆண்டு ஆகஸ்ட்  மாதத்திற்கு முன் ஆண் ஆதிக்கத்தால் 'கட்டுப்படுத்தப்பட்டது' என்பது பற்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் விரிவடைந்து வரும் பொதுவான கட்டுக்கதையையும் நீக்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 46.5 வீதமாகவும்,  ஹரியானாவில் 50.4 வீதம்,  மேற்கு வங்காளத்திற்கு 50.1 வீதம், குஜராத்திற்கு 48.1வீதம்  மற்றும் ராஜஸ்தானுக்கு 50.2 வீதம் என கையடக்க தொலைப்பேசி பயன்பாட்டில் பெண்களின் உரிமைகள் வரிசைப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17