கறுப்புக்கண்ணாடி மற்றும் திரைச்சீலை பயன்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் கடுமையான சட்டத்தைப் பின்பற்றவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் கண்டறிவதற்கு  நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது வாகன சாரதி மற்றும் வாகனத்தில் உள்ளவர்களை அடையாளம் காணும் பொருட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.