(என்.வீ.ஏ.)

சுப்பர்நோவாஸ் அணிக்கு எதிராக புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற மகளிர் ரி20 செலஞ் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் வெலோசிட்டி வெற்றியீட்டியது.

Women's T20 Challenge: Shafali, Wolvaardt dazzle as Velocity beat Supernovas  by 7 wickets | Cricket News - Times of India

திங்கட்கிழமை நடைபெற்ற முதலாவது போட்டியில் ட்ரெய்ல்ப்ளேஸர்ஸ் அணியை வெற்றிகொண்ட  சுப்பர்நோவாஸுக்கு இப் போட்டி முடிவு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

கணிசமான மொத்த எண்ணிக்கை பெறப்பட்ட 2ஆவது போட்டியில் சுப்பர்நோவாசினால் நிர்ணயிக்கப்பட்ட 151  ஓட்டங்களை    வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வெலோசிட்டி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப்   பெற்று வெற்றியீட்டியது.

Shafali Verma, Laura Wolvaardt dazzle as Velocity thrash Supernovas by 7  wickets in Women's T20 Challenge - Sports News

ஷபாலி வர்மா, லோரா வுல்வார்ட், அணித் தலைவி தீப்தி ஷர்மா ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் வெலோசிட்டியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

6 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது முதலாவது விக்கெட்டை இழந்த வெலோசிட்டிக்கு 2ஆவது விக்கெட்டில் ஷபாலி வர்மா, யஸ்டிக்கா பாட்டியா ஆகியோர் பகிர்ந்த 63 ஓட்டங்கள் நம்பிக்கை ஊட்டின.

யஸ்டிக்கா பாட்டியா 17 ஓட்டங்களுடனும் ஷபாலி வர்மா 33 பந்துகளில் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 51 ஓட்டங்களுடனும் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

Women's T20 Challenge 2022 | Supernovas vs Velocity report on May 24 -  myKhel

ஆனால், லோரா வுல்வார்ட், தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

லோரா வுல்வார்ட் 35 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 51 ஓட்டங்களுடனும் தீப்தி ஷர்மா 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சுப்பர்நோவாஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

Women's T20 Challenge: Shafali, Wolvaardt dazzle as Velocity win by seven  wickets- The New Indian Express

பிரியா பூணியா (3), டியேந்த்ரா டொட்டின் (6), ஹார்லீன் டியோல் (7) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 4ஆவது ஓவரில் சுப்பர்நோவாஸ் 18 ஓட்டங்களை மாத்தரமே பெற்றிருந்தது.

எனினும் டானியா பாட்டியா (36), அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலைக்கு இட்டுச்சென்றனர்.

Women's T20 Challenge: Shafali Verma hits fifty as Velocity beat Supernovas  by 7 wickets | Cricket News | Zee News

ஹார்மன்ப்ரீத் கோர் 51 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களைக் குவித்தார்.

சுனே லுஸ் 20 ஓட்டங்களுடனும் பூஜா வஸ்த்ரேக்கார் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் கேட் குரூஸ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.