குளவி கொட்டுத் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட காட்டுப்பகுதிக்குள் நேற்று விறகு எடுக்கச் சென்றிருந்த வேளை குறித்த நபரை குளவி தாக்கியுள்ளது. 

இந்நிலையில், குறித்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை - மிகிந்தபுரம் 2 ஆம் ஒழுங்கையைச் சேர்;ந்த 69 வயதுடைய சாதிகீன் அப்துல் கபூர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.