(நா.தனுஜா)
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவிற்குச் செல்லவிருப்பதாகவும், அங்கு அவருக்காக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் பாதுகாப்பான இடமொன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் வெளியான செய்திகளுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் மொஹமட் நஷீட் ஆகியோர் மறுப்பு வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவிற்குச் செல்லவிருப்பதாகவும், அவருக்கான மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் பாதுகாப்பான தங்குமிடமொன்றைத் தயார் செய்து வைத்திருப்பதாகவும் மாலைதீவைத் தளமாகக்கொண்டியங்கும் 'த மோல்டீவ்ஸ் ஜேர்னல்' என்ற செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
அதுகுறித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாகக் கருத்து வெளியிட்டுள்ள இருவரும் மேற்கண்டவாறு மறுப்புத்தெரிவித்துள்ளனர்.
அதன்படி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:
இம்முறை மாலைதீவிலும் இலங்கையிலும் அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதற்கென ஊடகங்கள் சில விடயங்களை பாரதூரமாக்குகின்றன.
நாட்டைவிட்டுச்செல்லும் நோக்கம் எனது தந்தைக்கு இல்லை. எனவே அவர் மாலைதீவிற்குச் செல்லப்போவதாகவும், அங்கு வீடு ஒன்றை வாங்கப்போவதாகவும் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை மொஹமட் நஷீட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.
'த மோல்டீவ்ஸ் ஜேர்னல்' என்ற ஊடகத்தில் வெளியான செய்தி முழுவதுமாக சோடிக்கப்பட்ட செய்தியாகும். இத்தகைய பொய்கள் மூலம் அதற்குப் பின்னால் இருப்பவர்கள் தொழில்முறை ஊடகத்துறையை குழிதோண்டிப்புதைக்கின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM