
அமெரிக்ககாவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், மெக்ஸிக்கோ எல்லை அருகேயுள்ள உவால்டே நகரிலுள்ள ரொப் ஆரம்பப் பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவர்கள் 7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் அவர்.
18 வயதான இளைஞன் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர் 18 வயதான சல்வடோர் ரமோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெக்ஸாஸ் ஆளுநர் கிறேக் அபோட் தெரிவித்துள்ளார்.
தாக்குதலாளியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.