தனிச் சிங்களத்தில் காணப்பட்ட கடிதத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து இன்று ஆளுநரால் தமிழ் மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலை மாணவர்களது கொலைக்கு நீதி விசாரணை கோரி கடந்த திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் ஏ 9 வீதியை மறித்தும் அமைதிப் போராட்டங்களை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தினர். 

இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குரிய மகஜர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடமும் வடமாகாண ஆளுநரின் செயலாளரிடமும் கையளிக்கப்பட்டன.

குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் வழங்கப்பட்ட கடிதத்திற்கு வடமாகாண ஆளுநரினால் பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

குறித்த கடிதமானது தனிச்சிங்களத்தில் இருந்தமையினால் அதில் என்ன எழுதியுள்ளது என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை என குறிப்பிட்டு  கடிதத்தினை பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் பதிவுத் தபால் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று தமிழ் மொழியில் மீண்டும் மாணவர்களுக்கு கடிதமொன்றை ஆளுனர் அனுப்பி வைத்துள்ளார்.