நாட்டின் இருவேறு பகுதிகளில் தீர்வை வரி செலுத்தப்படாது சட்டவிரோதமாக சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நீர் கொழும்பு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரேதமாக 4,800 சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய ஹிதோகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காத்தான்குடி

காத்தான்குடியில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தீர்வை வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமாக  இறக்குமதி செய்யப்பட்ட 1020 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 47 வயதுடைய காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.