ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இருபத்தி மூன்று (23) புதிய அமைச்சின் செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதி அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சர்வக்கட்சி அரசாங்கத்தின் 23 அமைச்சரவை அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.
- போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை – ஆர். டப்ள்யூ. ஆர். பிரேமசிறி,
- அரச நிர்வாகம், உள்நாட்டலுவல், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு –எம்.எம்.ஜி.கே.மாயாதுன்ன,
- துறைமுகம்,கப்பற்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு – கே.டி.எஸ்.ருவன்சந்ர,
- வர்த்தகம்,வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு –எஸ்.டி.கொடிகார,
- நீதி சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு- வசந்த பெரேரா,
- பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு –எஸ்.ஹெட்டியராட்சி,
- கல்வி அமைச்சு-எம்.என்.ரணசிங்க,
- மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சு –யு.டி.கே.மாயா
- பதிரன,கடற்றொழில் அமைச்சு-எம்.ஐ.ரத்நாயக்க,
- நீர் வழங்கல் அமைச்சு –மொன்டி ரணதுங்க,
- நீர்பாசனத்துறை அமைச்சு – யு.டி.சி.ஜயலால்,
- விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – அனுராத விஜேகோன்,
- சுற்றாடற்துறை அமைச்சு –வைத்தியர் அனில் ஜாசிங்க,
- ஊடகத்துறை அமைச்சு –அனுஷ பெப்லிட ,
- விவசாயத்துறை அமைச்சு –பி.ஆர் புஸ்பகுமார.
- புத்தசாசனம்,மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு – சோமரத்ன விதானபதிரன,
- கைத்தொழில் அமைச்சு –ஜெனரால் (ஓய்வு) தயாரத்ன,
- வெளிவிவகாரத்துறை அமைச்சு –அருணி விஜேவர்தன,
- பெருந்தோட்டத்துறை அமைச்சு –ஜே.தர்மகீர்த்தி,
- வனஜீவராசிகள் மறறும் வனவள பாதுகாப்பு அமைச்சு –சி.எம். ஹேரத் ,
- மற்றும் சுகாதாரத்துறை அமைச்சு –எஸ்.ஜே.எஸ்.சந்ரகுப்த,
- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு –ஜி.எச்.சி. ரத்நாயக்க ,
- தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு- ஆர்.ஜி.எச்.விமலவீர
ஆகியோர் அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
