பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபையை தனியார் மயப்படுத்தப்போவதில்லை - காஞ்சன விஜேசேகர

Published By: Vishnu

24 May, 2022 | 08:31 PM
image

(எம்.மனோசித்ரா)

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியவற்றை தனியார் மயப்படுத்துவது தொடர்பான எவ்வித கலந்துரையாடல்களும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரச - தனியார் கூட்டு முயற்சியான்மையின் கீழ் மேம்படுத்தவே எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரச - தனியார் கூட்டு முயற்சியான்மையில் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையோ அல்லது இலங்கை மின்சாரசபையையோ தனியார் மயப்படுத்துவது தொடர்பில் இது வரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

மாறாக இவை இரண்டினதும் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு தொடர் சேவைகளை வழங்கக் கூடிய சிறந்த நிறுவனங்களாகவே மாற்றுவதற்கு முயற்சிக்கின்றோம் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:36:11
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29
news-image

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும்;...

2026-08-12 14:55:46
news-image

ஜனாதிபதி நிதியம் தாமதம்: 25,000க்கும் அதிகமான...

2026-08-12 14:30:06
news-image

சர்ச்சையை ஏற்படுத்திய மகா சங்கத்தினரின் கடிதம்...

2026-08-12 14:28:29
news-image

சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு:...

2026-08-12 14:07:12
news-image

2022 இல் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதித்...

2026-08-12 13:51:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-08-12 12:58:41