சம்பள உயர்வு உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை முதல் ஊழியர் ஒருவர் சுகாதார அமைச்சின் கூரையிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.

குறித்த போராட்டத்தினை இலங்கை சுதந்திர சுகாதார சேவை சங்கத்தின் தலைமை பொருளாளர் அரணசிறி என்பவரே இதனை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சுகாதார அமைச்சு அமைந்துள்ள பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.