(எம்.மனோசித்ரா)
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி அலாகா சிங் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
அத்தோடு தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதிய சுகாதார வேலைத்திட்டங்களின் கீழ் , இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிளிலிருந்து எதிர்வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் மீள முடியும் என்று தான் நம்புவதாகவும் கலாநிதி அலாகா சிங் இதன் போது தெரிவித்தார்.
இலங்கையின் சுகாதார கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் வழங்கிவரும் ஒத்துழைப்புக்களையும் நினைவுகூர்ந்தார்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் போசனை மட்டத்தினை மேம்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் கலாநிதி அலாகா சிங் இதன் போது தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான உதவி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2 மில்லியன் பெறுமதியுடைய சுகாதாரத்துறைக்கு அவசியமான நன்கொடைகளை வழங்குவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
சுகாதார காப்புறுதியில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியைக் கோரியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM