எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொத்து ரொட்டி உட்கொண்ட 18 மாணவர்கள் வைத்தியசாலையில் | Virakesari.lk

அந்த வகையில் சில உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக கொத்து  ரொட்டி, பிரைட் ரைஸ், மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சரக்கு கொள்கலன்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.