(எம்.மனோசித்ரா) 

அரசாங்கத்தினால் மீள செலுத்தப்பட வேண்டியுள்ள வெளிநாட்டு கடன்களை மீள்கட்டமைப்பதற்காக சர்வதேச நிதியியல் மதியுரைஞர் சேவை மற்றும் சர்வதேச சட்ட மதியுரைஞர் சேவைக்கான பெறுகைக் கோரலுக்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக கோரப்பட்ட விலைமனுக்களுக்கமைய, நிதியியல் மதியுரைஞர் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக 28 முன்மொழிவுகளும், சட்ட மதியுரைஞர் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக 23 முன்மொழிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த இரண்டு பெறுகைகளுக்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நடவடிக்கைக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சர்வதேச நிதியியல் மதியுரைஞர் சேவைக்கான பெறுகை பிரான்ஸ் எம்.எஸ் லஸார்ட் நிறுவனத்திற்கு வழங்கவும் , சர்வதேச சட்ட மதியுரைஞர் சேவைக்கான பெறுகை பிரான்ஸ் எம்.எஸ் கிளிஃபோர்ட் எல்.எல்.பி. நிறுவனத்திற்கு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.