( எம்.எப்.எம்.பஸீர்)
அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தொடர்ந்து, கடந்த மே 9 ஆம் திகதி நாடெங்கும் பதிவான வன்முறைகளினிடையே, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கங்காராமையை அண்மித்த பேர வாவி அருகே பதிவான வன்முறைகள் குறித்த விசாரணைகள் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
பேர வாவியை அண்மித்த பெரஹர மாவத்தையில், கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறைகளின் போது சுமார் பஸ் வண்டிகள், ஜீப் வண்டிகள் உள்ளிட்ட சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன.
அத்துடன் அங்கு நடந்த வன்முறைகளில் , தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் 6 நாட்களின் பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயெ மனிதப் படுகொலை மற்றும், சொத்து சேதம், பேர வாவிக்குள் ஆட்களை கட்டாயமாக தடுத்து வைத்து சித்திரவதை செய்தமை உள்ளிட்டமை தொடர்பில் தற்போது சி.சி.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிசார் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்த போதும், தற்போது அவ்விசாரணைகள் சி.சி.டி.யினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 9 ஆம் திகதி பகல் வேலையில் பெரஹெர மாவத்தை - பிஷொப் கல்லூரி கேட்போர் கூட வளாகத்தின் நடைபாதையில் காயமடைந்து விழுந்த கிடந்த போது , நபர் ஒருவர் ஊடகவியலாளர்கள் சிலரால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிலவிய பதற்ற நிலைமையின் காரணமாகவே குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்த 16 ஆம் திகதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
அதற்கமைய தலை மற்றும் மார்பகப்பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயமே இவரது உயிரிழப்பிற்கான காரணம் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே குறித்த வன்முறைகள் தொடர்பில் சி.சி.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும் அந்த வன்முறைகளில் பாதிக்கப்ப்ட்டவர்கள் கொழும்புக்கு வெளியே இருந்து வந்தவர்கள் என்பதால் தற்போது வககு மூலம் பெற அவர்களை கண்டறிய நடவடிக்கைகலை சி.சி.டி.யினர் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM