மியான்மார் கடற்கரையில் 23 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கரை ஒதுங்கிய நிலையில் 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து , ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோதே  அவர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

படகு விபத்து- மியான்மர் கடற்கரையில் ஒதுங்கிய 14 உடல்கள் மீட்பு

இதேவேளை ,14 பேரின் சடலங்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உட்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் , மியான்மாரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள புத்திடாங், மவுங்டாவ் மற்றும் சிட்வே ஆகிய நகரங்களில் இருந்து மக்களை ஏற்றிக்கொண்டு படகு சென்றதாக சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.