(என்.வீ.ஏ.)

பங்களாதேஷ் பயணமான இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இடம்பெற்ற காமில் மிஷார ஒழுக்க விதிகளை மீறியதால் அவரை நாட்டுக்கு திருப்பி அழைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள 1 (ஜே) இலக்க ஒழுக்க விதியை மீறியமைக்காகவே மிஷாரவை மீளழைக்க தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

இதற்கு அமைய பங்களாதேஷிலிருந்து அவர் உடனடியாக நாடு திரும்பவுள்ளார்.

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய குழாத்தில் மிஷார இடம்பெற்றபோதிலும் 2 டெஸ்ட்களிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவர் நாடு திரும்பியதும் ஒழுக்க விதிகளை மீறயமை தொடர்பாக அவரிடம் விரிவான விசாரணை நடத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிககெட் நிறுவனம் தெரிவித்தது.

விசாரணையில் வெளியாகும் விடயங்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலதிக நடவடிக்கையை எடுக்கும்.

இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முன்னிட்டு பெயரிடப்பட்டுள்ள உத்தேச குழாத்திலிருந்து காமில் மிஷார நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.