(ஏ.என்.ஐ)

இந்திய  மற்றும் பங்காளதேஷ் கடற்படைகளுக்கு இடையிலான  ஒருங்கிணைந்த 4 ஆவது கூட்டுப்பயிற்சி  ஆரம்பமாகியது.

இரு கடற்படைகளும் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்ற நிலையில்  இந்த கூட்டுப்பயிற்சி தொடர்ச்சியாக 4 ஆவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்திய கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் கோரா மற்றும் ஐஎன்எஸ் சுமேதா மற்றும் பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பல்களான பிஎன்எஸ் அலி ஹைதர் மற்றும் பிஎன்எஸ் அபு உபைதா ஆகியவை ரோந்து பணிகளில் ஈடுப்படுகின்றன.

 அதே போன்று இரு கடற்படைகளின் கடல்சார் ரோந்து விமானங்களும் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் கூட்டு ரோந்து  நடவடிக்கைளில் ஈடுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.