குரங்கு அம்மை தொற்று

Published By: Digital Desk 5

24 May, 2022 | 12:50 PM
image

குமார் சுகுணா

தற்போதைய காலகட்டத்தில் வைரஸ்களின் காரணமாக மனிதர்களுக்கு அபாயகரமான நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. 

அந்தவகையில் கடந்த  2019 களில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் உலகில் குறையவில்லை. 

இத் தொற்று காரணமாக இன்றும் உலகில் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  உயிரிழப்புகளுக்கும் உள்ளாகுகின்றனர். 

இந்நிலையில் கொரோனாவை மிஞ்சும் வகையில் புதிய வைரஸ் தொற்று தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

குரங்கு அம்மை எனும் இந்த வைரஸ் பல நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா பிரித்தானியா,  இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளிலும்  ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது.

இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குரங்கு அம்மை நோய் ஒரு அரிய வகை நோயாகும். இந்த நோய் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. 

இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. 

அதன்பின் 1970 ஆம் ஆண்டு முதன் முதலில் குரங்கு அம்மை மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த குரங்கு அம்மை, சின்னம்மையுடன் தொடர்புடையது  மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970இல் கொங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. 

இந்த வைரஸ் தொற்று 2017 முதல் நைஜீரியா,கொங்கோ நாடுகளில் மீண்டும் பரவி வருகிறது.

இப்போது குரங்கு அம்மை தொற்று பிரிட்டனில் முதல்முறையாகக் கண்டறியப்பட்டது.

வைரஸால் பாதிக்கப்பட்டவர் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போது இந்தக் குரங்கு அம்மைத் தொற்று பரவுகிறது. 

எலிகள், அணில்கள், போன்ற கொறித்து உண்ணும் விலங்குகளிடம் இருந்து பரவுவதாக நம்பப்படுகிறது.

மனிதர்களுக்கு மனிதர்கள் பரவுவது என்பது எச்சில், சளி மூலமாக இருக்கலாம். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு என்பது கடித்தலின் மூலம் இருக்கலாம்.

உடல் திரவங்கள், கவாச நீர்த்துளிகள், வைரஸ் கலந்த பொருட்கள் மூலம் அல்லது கண்கள், மூக்கு வாய் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழையலாம்.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வீக்கம், முதுகுவலி உள்ளிட்டவை குரங்கு அம்மையின் ஆரம்பகட்ட அறிகுறிகள்.

காய்ச்சல் தொடங்கி ஒன்றில் இருந்து மூன்று நாள்களுக்குள் அரிப்பு ஏற்படுகிறது. முகத்தில் தோன்றும் இந்த அரிப்பு பின்னர் கைகள், உள்ளங்கால்களுக்குப் பரவுகிறது.இந்த நோய்த்தொற்று பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும்.

பின்னர் தானாகவே மறைந்துவிடும்.குரங்கு அம்மைக்கு என இப்போது தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. 

இருப்பினும் பெரியம்மை தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரிதும் பயனுள்ளவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் ஒன்று குரங்கு அம்மையைத் தடுக்கும் வகையில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நோய் பாதிப்பில்லை என்று கூறப்பட்டாலும் குரங்கு அம்மையின் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் புகைப்படங்களை காணும் போது அச்சமாகத்தான் இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதிகள் வரலாம் போகலாம்; ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி...

2024-10-05 12:29:13
news-image

தனியார் கடன் அதிகரிப்பினால் வளர்ச்சியடையும் பொருளாதாரம்

2024-10-04 16:15:59
news-image

தென்னிலங்கையுடன் இணையும் புதிய அரசியலை நோக்கி...

2024-10-03 20:30:56
news-image

இ.தொ.காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...! 

2024-10-03 17:26:10
news-image

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும்...

2024-10-02 13:56:37
news-image

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட புதிய...

2024-10-02 10:45:36
news-image

மாறி வரும் உலகில் உணரப்படாத வயோதிபம்

2024-10-01 15:53:03
news-image

பரீட்சை வினாக்களின் கசிவு: பொறுப்புக்கூறுவது யார்?

2024-10-01 14:52:31
news-image

இலங்கை சிறுவர்களின் நலன் கருதி முக்கிய...

2024-10-01 11:04:59
news-image

அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை...

2024-10-01 10:47:45
news-image

முதியோரின் உணர்வுகளை மதிப்போம் : இன்று...

2024-09-30 11:48:26
news-image

சிறுவர்களின் உலகைக் காப்போம்! : இன்று...

2024-09-30 12:17:38