யாழில் ஒரு வருட காலமாக கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது - நகை, பணம் மீட்பு!

By Vishnu

24 May, 2022 | 12:05 PM
image

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வருட காலமாக 6 வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, கடந்த 2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் 6 வீடுகளில் தான் தங்க நகைகள் , பணம் என்பவற்றை கொள்ளையிட்டதா தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right