இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் புதுக்கோட்டை அருகே உள்ள தேநீர் கடையொன்றில் 22 ஆம் திகதி மொய் விருந்து நடத்தி நிதி சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

No description available.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த  46 வயதுடைய சிவக்குமார் என்பவரே இவ்வாறு மொய் விருந்தை நடத்தி இலங்கை மக்களுக்கு நிதி சேகரித்துள்ளார். 

மொய் விருந்து நடத்தி இலங்கை மக்களுக்கு நிதி

இவர்,  கடந்த 2018 ஆம் ஆண்டில் , 'கஜா' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது,  30 ஆயிரம் ரூபாவை மக்களுக்கு வழங்கியுள்ளார். 

கொரோனா பரவலின் போது, பொதுமக்களுக்கு உதவி செய்வதற்காக, தனது தேநீர் கடையில் மொய் விருந்து நடத்தி, 20 ஆயிரம் ரூபாயை, வழங்கியுள்ளார்.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக, கேப்பறையில் அவர் அண்மையில் ஆரம்பித்த தேநீர் கடையில், கடந்த சனிக்கிழமை மொய் விருந்தை நடத்தியுள்ளார்.

இங்கு, மொய் வழங்கியோருக்கு தேநீர் , வடை, போண்டா போன்ற உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. 

இந்த தேநீர் கடையில் தேநீர்  குடிக்க வந்தோரிடம் பணம் ஏதும் வாங்காமல், அவர்களாக இஷ்டப்பட்டு தரும் கூடுதல் பணத்தை, மொய் விருந்து உண்டியலில் சேகரித்துள்ளார்.

தேனீர் கடையில் மொய் விருந்து நடத்தி ரூ.16 ஆயிரம் வசூல் செய்த உரிமையாளர்

இது குறித்து, சிவக்குமார் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக, கேப்பறை தேநீர் கடையில், ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியில் இருந்து, இரவு 7:00 மணி வரை மொய் விருந்து நடத்தினேன்.

கிடைத்துள்ள பணத்தை, மாவட்ட கலெக்டர் வாயிலாக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழகத்தின் பரமக்குடியில் தரம் மூன்றில் கல்வி பயிலும் கோபிகா ஸ்ரீ எனும் மாணவி சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கைக்கான நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 2,000 இந்திய ரூபாவை அவர் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் கடந்த 21 ஆம் திகதி கையளித்துள்ளததாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.