விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு, பெண்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த பொலிவுட் நடிகை ஆர்ஷிகான், அங்கிருந்து தப்பி சென்று விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பொலிவுட் படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மாடல் அழகி ஆர்ஷிகான். 

இவர் ஒருமுறை, துபாய் பயணத்தின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியும் உடலுறவு கொண்டாதக செய்திகள் வெளியானது.

இதுபற்றி டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்த அவர் “ஆமாம், நான் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன். அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை. யாரை நான் விரும்புகிறோனோ அவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வேன். இது மற்றவர்கள் தலையிடுவதற்கு உரிமை இல்லை” என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

மேலும், அதன்பின், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதர்கு அப்ரிடிதான் காரணம் என்று குண்டை வீசினார். 

அதன்பின் சமீபத்தில், புனேயில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக, அவரை பொலிஸார் கைது செய்து, வான்வாடியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வைத்திருந்தனர். 

ஆனால், நேற்று காலை அங்குள்ள பெண் காப்பளர்களுடன் வாக்கு வாதம் செய்த அவர், மாலை அங்கிருந்து தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது வழக்குப் பதிவு பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.