நாட்டில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.

அதன்படி இன்று 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி முதல் குறித்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Image

ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்  420 ரூபாவுக்கு விற்பனைசெய்யப்படவுள்ளதாகவும் ஒக்டெய்ன் 95 ரக பெற்றோலின் விலை 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 445 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திக் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகராக லங்கா ஐ.ஓ.சியும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.