குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன இடமாற்றம் கோரிய நிலையில் தற்போது புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் | Virakesari.lk

இடமாற்ற கோரிக்கையை அடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு தற்போது புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்ன, தன்னை அப்பதவியிலிருந்து வேறு பொறுத்தமான கடமைகள் தொடர்பில் இடமாற்றம் செய்யுமாறு, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி கோரிக்கை விடுத்த நிலையில், அவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்தே நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.