இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் மார்டின் குப்டிலின் அரைச்சதத்தின் உதவியுடன், நியுஸிலாந்து அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமப்படுத்தியது.

நாணய சுழற்சியில் வென்ற நியுஸிலாந்து அணித் தலைவர் வில்லியம்ஸன் களத்தடுப்பை தேர்வு செய்தார். 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 260 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.

நியுஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டிலின் 72 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்..

261 என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 48.4 பந்து ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 241  ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் ராஹனே 57 ஓட்டங்களையும்  கோஹ்லி 45 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக நியுஸிலாந்து அணியின் குப்டில் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை  2-2 என நியுஸிலாந்து அணி சமப்படுத்தியுள்ளது